செல்மாவும் நானும்!

1992 ஒரு இளம் கவிஞனும் அவனால் நடுத்தரவயது நண்பன் என்று வர்ணிக்கப்பட்ட நானும் ஒரு நகரத்தில் சந்தித்துக் கொண்டோம். இரு வேறு அருகாமை ஊர்களைத் சேர்ந்தவர்களாயினும் கற்பு என்றாலே எனக்கு ஒரு நீண்ட குசுதான் வருகிறது என்றும் தமிழ்தான் எனக்கும் மூச்சு ஆயினும் அதைப் பிறர்மேல் விடமாட்டேன் என்ற ஞானக்கூத்தனின் கவிதைகள்?! மீது வெஞ்சினம் கொண்ட அவ்விளைஞன் இரு கல்லறைகளின் இடையே உள்ள ஒரு சந்து முனையில் சைக்கிளில் அறிமுகமானான். அவனது தமக்கையின் கணவர், அவரும் கவிஞர், …

சிலருக்கு

சிலருக்கு கம்பர்சிலருக்கு இளங்கோசிலருக்கு ஔவைசிலருக்கு வள்ளுவர்சிலருக்கு பாரதியார்சிலருக்கு பாரதிதாசன்சிலருக்கு நகுலன்சிலருக்கு பிரமிள்சிலருக்கு மௌனிசிலருக்கு கல்கி கிருஷ்ணமூர்த்திசிலருக்கு கோவி மணிசேகரன்சிலருக்கு புதுமைப்பித்தன்சிலருக்கு ஜானகிராமன்சிலருக்கு வைத்தீஸ்வரன்சிலருக்கு ந பிச்சமூர்த்திசிலருக்கு கரிச்சான் குஞ்சுசிலருக்கு சி சு செல்லப்பாசிலருக்கு ஞானக்கூத்தன்சிலருக்கு கநாசுசிலருக்கு வெங்கட் சுவாமிநாதன்சிலருக்கு சுஜாதாசிலருக்கு பாலகுமாரன்சிலருக்கு ஜெயகாந்தன்சிலருக்கு அசோகமித்திரன்சிலருக்கு அ முத்துலிங்கம்சிலருக்கு கு ப ராசிலருக்கு கு அழகிரிசாமிசிலருக்கு சுந்தர ராமசாமிசிலருக்கு வண்ணநிலவன்சிலருக்கு வெங்கட்ராம்சிலருக்கு லா ச ராசிலருக்கு தமிழவன்சிலருக்கு ஆதவன் தீட்சண்யாசிலருக்கு வீ அரசுசிலருக்கு தொ பசிலருக்கு கலாப்பிரியாசிலருக்கு பிரம்மராஜன்சிலருக்கு …

இளங்கோ ஒரு பொறுப்பற்ற அகாலவாசி

இளங்கோவனை எழுப்பியாக வேண்டும் என்கிற கவிஞர் விஸ்வநாதன் கணேசனின் கவிதைத் தொகுப்புக்கு ஒரு வாசிப்புரை. முழு இரவு நாட்களில் காகங்கள் உணவு எடுக்கும் பழக்கத்தில் இருந்து இன்னும் விடுபடாத திணைகள், வீட்டிற்கொரு கருவேப்பிலைச் செடி நிற்கும் குடித்தனங்கள், வாசல்படி மற்றும் மழைநாளில் மாடிப்படிக்குக் கீழ் இருசக்கரவாகனங்கள் கிடக்கும் வீடுகள், விரிவாகும் சிற்றூர் பேரூர் நகரங்கள் அவற்றைக் கோத்துக் கொண்டு போகும் நெடுஞ்சாலைகள், திடும் எனக்கடக்கும் மேம்பாலங்கள், முகம் காணாமல் கைபேசியில் தடம் கண்டு விலகி ஓடும் இளம்பிராயங்கள், …

பின் உண்மைகளின் காலத்தில் கலை, இலக்கியத்தை இற்றைப்படுத்துதல்

அமேசானில் வெளிவரவிருக்கும் அடுத்த பிரதிகள் நூலுக்கு எழுதிய முன்னுரை தமிழில் தொண்ணூறுகளுக்குப் பிறகான விமர்சனப் போக்கு என்பது ஒரு கட்டத்தில் சிறுபத்திரிக்கை சார்ந்து கறாராக இருந்துவந்தது. அது வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் ஓர் ஒழுங்கையும் தூய்மையையும் பேணியது. போக மற்றமைகளுக்கு இடம்தராத புனிதங்களின் தொகுதியாகவும் விளங்கியது. அத்தைகைய அரூபச் சிந்தனைகள் இறுதியில் மனித நிலைப்பாடை ஆன்மிக இருப்பு என்பதாக வரையறுத்தது. அதற்கு வெளியில் எந்த இருப்பிற்கும் அவை முகங்கொடுக்கவில்லை. நாளடைவில் புதிய வகைப் படைப்பாளிகள் இக்காலத்தில் நிறைய அறிமுகமானார்கள். …

சென்னை: தங்கசாலையில் இருந்து தங்க நாற்கர சாலை வரை…

சென்னை சென்ட்ரல் நிலையமருகில் இருக்கும் வால்டாக்ஸ் சாலையில், மேலே தங்கும் விடுதியுடன் கூடிய உடுப்பி விலாஸ் உணவகங்களில் நான் ஒரு காலத்தில் வியாபார நிமித்தம் சென்று தங்க வேண்டியிருந்தது. யானைக்கவுரி தாண்டி வலதுபுறம் கொத்தவால் சாவடியில், எனக்கு வணிகம். மின்ட் ரோடு எனும் தங்க சாலையில் ஏராளமான வடநாட்டவரின் மொத்த வியாபர கடைகளும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகளில் வந்திறங்கும் காய்கனி, கருவாடு, கொட்டைப்பாக்கு முதல், மிட்டாய்கள், பான் வெற்றிலைகள், பீடாச் சரக்குகள், உலர் பழங்கள், …

தமிழ் நவீனக் கவிதையில் ஞானக்கூத்தன் ஒரு திருப்புமுனை

நாளடைவில் ‘அன்று வேறு கிழமை’யையும், ‘நடுநிசி நாய்களையும்’ நூலகத்தில் எடுத்து வாசித்தபோது அக்கவிதைகள் என்னோடு தனிமையில் உறவாடியது போலத் தோன்றியது. மிகப்பெரும் நெருக்கடியோ கொந்தளிப்பான சூழல்களோ அல்லாமல், கெடுபிடியான மிசாக் காலங்களும், ‘ஸ்கைலாப்’ எனும் செயற்கை விண்கோள் ஒன்று பழுதாகி பூமி மேல் விழப்போவதாகவும் வந்த அச்சுறுத்தல்களும் இறுதியில் அது கடலில் விழுந்து விட்டதாகக் கூறிய காலங்களும் கடந்து போயிருந்தன. ஆங்காங்கே கழகப் பிரச்சாரங்களும், கம்யுனிஸ்ட் ஊர்வலங்களும், கோவில் விழாக்களும், நடிகர்களுக்கான ரசிகர் மன்றங்களுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் …

கவிதை மொழிதலும் மொழிபெயர்ப்பின் அழகும்

கவிதையின் பயணம் - மொழிபெயர்ப்பு சிக்கல்: யவனிகா ஸ்ரீராம் கவிதையை முன்வைத்து —பேராசிரியர் பத்ரி மூங்கில் வடிகள் அரிசியின் பயணத்தில் நான் ஒரு மூடாந்திர மான ஆள்நேரத்திற்கு ஒரு பறவையின் பெயரை உச்சரிப்பேன்கிழக்குக் கரைகளில் கடல் வற்றிக் காய்ந்த உப்பளங்களில்நாற்றங்கால் வந்ததுஉச்சிப்பாறையில் கழுகு நிற்கஅரிசி பயணிக்கிறது மலங்காட்டிற்கு..         சீன நாடோடிகளின் மூங்கில் வடிகளுக்கு.....மீனவர்களின் மண் கலயங்களுக்கு....பிண்டத்திலிருந்து இரைச்சலிடும் காக்கைகளுக்கும்....அரிசியின் கதையில்பல லட்சம் வார்த்தைகள்கொலையின் தடங்கள்ஒரு ஆற்றின் நெடுங்கணக்கும் கூடமேலும் அரிசி உலோகங்களைக் காய்ச்சி வடித்துஎரிமலையின் கீழ் மீண்டும் பச்சையாய் அரும்புகிறதுவிலங்குகள் விலகிச் செல்லும் அரிசியின் பாதையில்நான்கு ஆளாக்கு அரிசியின் எடை நான்பயணிக்கிறது அரிசி கோதுமை பார்லி மற்றும்எண்ணெய்களின் கை மாற்றுக்கு...ஒரு மது வகைக்கு நிச்சலாமான துறவிக்கு....வயல்களிலிருந்து எலி, எறும்புகளின் வீட்டிற்கும்....இப்பொழுது கழுகுஉச்சிப்பாறையிலிருந்து கிளம்பி விட்டதுநிலங்களை சமவெளியை அது நோட்டமிடுகிறதுஎனது அரிசியை மூடி வைக்கிறேன்.சிறு தூரல் விசிற தொலைவில்நாற்றாங்கல்களைகொக்குகள் அலசிக் கொண்டிருக்கின்றன. —யவனிகா ஸ்ரீராம் Bamboo Cookers An enigmatic, I becomeIn the journey of riceName of a bird will be spilled out in TimeNurseries came from the salt pans of the dried East coastThere rests an eagle on the summit.The journey of Rice ascendsTo the yards of formidable zones....To the bamboo cookers of the …

மற்றொரு வாய்ப்பிற்கு ஏங்குபவர்கள்

ஒரு நிர்ணயிக்கப்பட்ட சூழலில் பிறந்து அதைப் புறவயமாக அனுபவிக்க நேர்ந்துவிடும் ஒருவருக்கு இன்னொரு வாய்ப்பு என்பது ஆகிவந்த அமைப்புகளுக்கு வெளியே ஆயுளுக்கும் கிடைப்பதில்லை. இங்கு இன்னொரு வாய்ப்பு என்பது எப்போதும் நியதிகளுக்கு வெளியே தன்னிலைகொள்வது என்பதாகிறது. முரண்பாடுகள் வேறு, எதார்த்தம் கட்டமைக்கும் அகம் என்பது வேறு, என்கிற இந்த இருமையானது ஒருவரை வாழ்க்கையின் அத்தனை விதிகளுக்குள்ளும் இழுத்துவிட்டு இறுதியில் அவரை ஒரு ஆன்மீகவாதியாக ஆக்கிவிடுகிறது. மற்றபடி சிந்திக்கும் எந்திரம் என்கிற நவீன உயிர்த்தன்மையில் கொடுக்கப்பட்ட லௌகீகவிதிகளுக்கு அப்பால், …

சூதாடும் புத்தகத்திலிருந்து இறங்கும் சீட்டு

படைப்பாளி நிஜம்; படைப்பாளியோடு வாசகனும் நிஜம். மொழியின் முப்பரிமாணத்தன்மைதான் படைப்பு. அது காட்டும் மாயத்தோற்றத்தை ஒன்றிணைத்து காண்பதுதான் கலை. முப்பட்டைக் கண்ணாடிச் சட்டகத்தை அசைப்பவனைப் பொறுத்தும் அசைபடும் பொருட்களைப் பொறுத்தும் தோற்றம் விசித்திரம் தருகிறது எனப் புரிந்துள்ளவர்கள் கலையின் பயன்பாடு குறித்து அக்கறைப்படுவதில்லை. அது ஒரு மொழி விளையாட்டு என்று தெரிந்தே ஈடுபடுகிறார்கள். மொழியின் தொடர்ச்சியிலிருந்து ஒரு ‘பிடுங்கல்'. அவளது ஒரு தேர்ந்தெடுப்பைப் படைப்பாளி புத்தகமாக்குகிறான் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். எந்திரமயமான வாழ்வில் மொழியை மட்டும் உணர்வுத் …

ஓலை நறுக்கு

காதலுக்காக காத்திருக்க முடியாது அது பல லட்சம் செவ்வியல் மொழிகளால்அடைகாக்கப் பட்டுள்ளதுமேலும் அது துறைமுகங்கள் டெர்மினஸ்கள் பூங்கா மரத்தடிகள் பள்ளிக் கல்லூரி வகுப்பறைகள் நதியோரங்கள்படகுத்துறைகள்அதிகம் செலவு செய்து கட்டப்பட்ட இனகுல மத தேச சாதிய வீடுகளுக்கு வெளியே தான்தோன்றி தனமாய்பைத்தியக் கார அல்லது பிச்சைக்காரத்தனத்தின் தெருவோர சந்திப்பாய்குறைந்தபட்ச பொது தர்மத்தின் தாக்குதலுக்கு உள்ளாகும்படி களத்தில்விருப்ப உறுதியாய் அவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது இரண்டு சிறுநீரகம் ஒரு இதயம்துல்லிதமாக கல்லீரலில் ஒரு உலோககால இரும்பு வாளைச் சொருகினால்காதலைப்பிணமாகக் கிடத்தலாம் அப்பிடித்தான் அந்த சிறிய …

Design a site like this with WordPress.com
Get started