யவனிகா ஸ்ரீராம்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி எனும் ஊரை வசிப்பிடமாகக் கொண்ட யவனிகா ஸ்ரீராம், 1993 முதல் தமிழின் நவீன கவிதை வழியில் விலகி தனித் தன்மையான அரசியல் அவதானிப்புடன் எழுதத் துவங்கியதில், இன்று வரையில் அவரது ஆறு தொகுப்புகள் இலக்கிய வெளியில் அடையாளப் பட்டிருக்கின்றன. வணிகமும் விவசாயமும் ஆன குடும்பப் பின்னணியில் பிறந்து பள்ளி இறுதிக் கல்வியை முடித்தபின் மேற்சொன்னவை காரணமாகப் பல்வேறு நிலங்களுக்குப் பயணிக்க வேண்டி வந்த நினைவுப் பாதையில் பலவாறாக நகர்ந்து இக்கவிதைகளைச் சேகரித்துக் கொண்டதாகச் சொல்லும் அவர், சமகாலக் கவிதைகள் தண்டனை வழங்க இயலாத குற்ற இன்பங்களின் அழகியல் சார்ந்தவை என்கிறார்.

Design a site like this with WordPress.com
Get started